தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்லூரிகளில் நடைபெறும் நேரடி வகுப்புகளை ரத்து செய்யலாமா என உயர் கல்வித்துறையிடம் சுகாதாரத்துறை அறிக்கை கேட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தஞ்சை உட்பட 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

Related Stories:

More
>