×

இந்தியாவில் பெண்களுக்கான அதிகாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது: ஐ.நா.மாநாட்டில் மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி உரை..!

டெல்லி: இந்தியாவில் பெண்களுக்கான அதிகாரத்தை மேம்படுத்தி, அதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐ.நா.மாநாட்டில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். பெண்களின் நிலை தொடர்பான ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வின் பொது விவாதத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார்.

இதனையடுத்து, அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் எங்கள் மகள்களுக்கு கொரோனா பரவலுக்கு பிந்தைய காலத்தில் மிகவும் நியாயமான மற்றும் சமமான உலகை கட்டமைப்பது என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியுடன் உள்ளது. மேலும், பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான அதிகாரத்தை மேம்படுத்தி இந்தியா, அதை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு சுகாதாரம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் கல்விக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக முதன்மையான திட்டங்களை இந்தியாவில் நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்களில் பெண்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : India ,Minister ,Smriti Rani , India, UN Conference, Smriti Irani, Speech
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...