ராமர் கோயில் விரிவாக்கத்துக்கு மேலும் 1.15 லட்சம் சதுரடி நிலம் வாங்கியது அறக்கட்டளை: ரூ.8 கோடி விலை தரப்பட்டது

அயோத்தி: அயோத்தியில் கடந்தாண்டு ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடைபெற்ற பிறகு, அதன் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த கோயில் கட்டுமானத்துக்காக இதுவரை ரூ.1,500 கோடிக்கு மேல் நன்கொடை  பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கோயிலின் விரிவாக்கத்துக்காக அருகிலுள்ள நிலங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இந்த மாதம் ஆரம்பத்தில் முதல்முறையாக அருகில் உள்ள 7,285 சதுரடி நிலத்தை, கோயில் கட்டுமான பணியை செய்து வரும் ராம  ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ரூ.1 கோடிக்கு வாங்கியது.

 இதைத் தொடர்ந்து, தற்போது 1.15 லட்சம் சதுரடி நிலம் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து அறக்கட்டளை நிர்வாகியான அனில் மிஸ்ரா கூறுகையில், ‘‘ராமர் கோயில்  கட்டப்பட்டு வரும்  இடத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் 2 நிலங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இதன்  விலை ரூ.8 கோடி. மேலும், கோயிலை சுற்றியுள்ள இடங்களை வாங்க, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது,’’ என்றார். இலங்கையில் இருந்து கல் ராவணனால் கடத்தி செல்லப்பட்ட சீதாதேவி, இலங்கையின் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டதாக இதிகாசங்கள் கூறுகின்றன. ‘சீதா எலியா’ என்ற பெயரில் தற்போது அழைக்கப்படும் அசோகவனத்தில் சீதாதேவிக்கு கோயில் ஒன்றும்  அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு இங்கிருந்து கல் ஒன்று வரவழைக்கப்படுகிறது. இதற்கு இலங்கை அரசும் சம்மதம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>