×

பொருளாதாரம் ரொம்ப முக்கியம்...!: சி.டி.ரவி ‘ஓபன் டாக்’

விருதுநகர் வகுத்தான் மண்டபத்தில் பாஜ தேர்தல் ஊழியர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜ தேசிய பொதுச்செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி பேசுகையில், ‘‘தாமரை மலர்வது  மக்கள் கைகளில் தான் இருக்கிறது. யார் வெல்வார்கள் என்பது உங்களுக்கே தெரியும். 11 மருத்துவக்கல்லூரிகள், மதுரை  எய்ம்ஸ், மெட்ரோ ரயில் சேவை, ஸ்மார்ட் சிட்டி எல்லாம் மோடி கொடுத்தது. வேட்பாளர்கள் பொருளாதாரம், ஆளுமை,  சூழ்நிலையை தெளிவாக வைத்துக்  கொள்ள வேண்டும். இவை இல்லை என்றால் வெற்றி பெறுவது கடினம்’’ என்றார். ஸ்மார்ட் சிட்டி, எய்ம்ஸ் எல்லாம் வராமலே வந்துவிட்டது என்கிறார், ‘பொருளாதாரம் முக்கியம்’ என்கிறார்,  வேட்பாளர்களை சகட்டு மேனிக்கு செலவு செய்ய சொல்கிறாரோ என பாஜ கட்சியினர் முணுமுணுத்தனர்.


Tags : Ravi , Economy is very important ...!: CT Ravi 'Open Talk'
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...