விமானத்தில் படம் சோனு சூட்டுக்கு கவுரவம்

பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் சோனு சூட் செய்த பல நல்ல காரியங்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். தனது ஓட்டலை சுகாதார பணியாளர்களுக்கு வழங்கினார். வெளியூரில் சிக்கிக் கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு பஸ், ரயில், விமானத்தில் அனுப்பி வைத்தார். அவரின் இந்த சேவையை பலரும் பாராட்டினார்கள். இந்த நிலையில் ஸ்பைஸ் ஜெட் விமானம் வெளிநாட்டுக்கு செல்லும் தனது ேபாயிங் 737 ரக விமானத்தில் சோனுசூட்டின் படத்தை வரைந்து ‘சல்யூட் டு தி சேவியர் சோனுசூட், ’ என்று குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டில் தவித்த தொழிலாளர்கள், மாணவர்களை சோனுசூட் இந்த விமானம் மூலம்தான் இந்தியா அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>