திமுக வாக்குறுதிகளை செயல்படுத்துவேன்: மா.சுப்பிரமணியன் பிரசாரம்

சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று தொகுதிக்கு உட்பட்ட ஜோதிராமலிங்கம் தெரு, நிவாசன் முதல் மற்றும் 2வது தெரு, வாழைத்தோப்பு ஏ,பி,சி,டி,இ,எப், கே.எல்.எம் மற்றும்  ஐ.ஜே.கே.பிளாக், அரங்கப்பன் தெரு, தெற்கு கே.ஆர்.கோயில் தெரு, தேவநாதன் காலனி, கோவிந்தன் சாலை, ரெட்டிகுப்பம் சாலை, படவட்டம்மன் கோயில் முதல் மற்றும் 2வது தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, அரங்கநாதன் சுரங்கப்பாதை  ஆகிய தெருக்களில் 5 மணி நேரம் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.  வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘140வது  வார்டில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.96 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டும்  பணி நடைபெற்று வருகிறது.

போடம்பாக்கம்  சாலையில் உள்ள சென்னை  மாநகராட்சி பூங்காவிற்கு ரூ.4 லட்சத்தில் ஆழ்துளை கிணறு  அமைக்கப்பட்டுள்ளது.  சென்னை ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ.5லட்சத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் ரூ.11 லட்சத்தில் மேசை நாற்காலிகள் என பல்வேறு திட்ட பணிகளை செய்துள்ளேன். என்னை மீண்டும் வெற்றி பெற செய்தால், திமுக  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்,’’ என்றார்.

சைதை மேற்கு பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினரும் வட்ட செயலாளருமான வழக்கறிஞர் எம்.தரன், அவைத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசன், வட்ட செயலாளர்  ந.தமிழரசு, பகுதி கழக நிர்வாகிகள் சி.பி.இறைவன், வி.பி.ஜானகிராமன், கவிராஜ், கவிதா கவுதமன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>