பல கோடி மதிப்பிலான 47 டெண்டர்கள் அமைச்சர் வேலுமணி உறவினர்களுக்கு மட்டுமே வழங்கல்: அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல ஊழல்களை செய்துள்ளார். அதில் ஒரு ஊழலை பார்க்க போகிறோம். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மே 2014ல் அமைச்சரான பிறகு கோவை மாநகராட்சியில் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரோயகம் செய்து, தன்னுடைய சகோதரர் அன்பரசனின் நிறுவனமான செந்தில் அன்கோவிற்கு எப்படி டெண்டர்களை கொடுத்தார் என்பதை பார்க்க போகிறோம்.

செந்தில் அன்கோ என்னும் நிறுவனம், ராஜன் ரத்தினசாமி என்ற நபரும், அதாவது இந்த 2 பேரும் மட்டுமே பங்கு பெற்று கிட்டத்தட்ட 47 டெண்டர்களில் போட்டி போடுகிறார்கள்.  இவர்கள் மட்டும் டெண்டர்களை எடுத்து கொள்கிறார்கள். 2014 முதல் 2017 வரை இது நடக்கிறது. இந்த ராஜன் ரத்தினசாமி என்ற நபர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் செந்தில் அன்கோ என்ற நிறுவனத்திலேயே வேலை செய்வதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் 47 டெண்டர்களில் அடுத்தடுத்து டெண்டர் அப்லோடு செய்துள்ளனர். இந்த ெடண்டர்களில் சில ரேண்டமான டெண்டர்களை எடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அனுப்பி இது குறித்து கேட்டோம். அதில் அனைத்து டெண்டர்களும் ஒரே ஐபி அட்ரஸில் இருந்து அப்லோடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது.

அது மட்டுமல்ல கோயமுத்தூர் மாநகராட்சி ரிஜிஸ்டர் கான்ரக்டர் லிஸ்டை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் செந்தில் அன்கோ நிறுவனத்திற்கும், ராஜன் ரத்தினசாமிக்கும் ஒரே  தொலைபேசி எண்ணை கொடுத்து இருக்கிறார்கள். அந்த தொலைபேசி எண்ணை ”ட்ரூ” காலரில் பார்க்கும் போது ராஜா(எஸ்பிவி) என்று வருகிறது. பெயரளவில் இரண்டு பேரை காட்டியுள்ளனர். ஆனால் இவை அனைத்தும் சிங்கில் டெண்டர்கள். டெண்டர்கள் விதிமுறைகளை மீறி கோடிக்கணக்கான ரூபாய் டெண்டர்களை தனது சகோதரருக்கு கொடுப்பதற்காக இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி தன்னுடைய குடும்பத்திற்கே சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக அதிகாரத்தை துஷ்பிரோயகம் செய்து இருக்கார் என்பது இந்த ஊழலில் இருந்து தெள்ள தெளிவாக தெரிகிறது.

Related Stories:

>