மூத்த தலைவர் சி.ஏ.குரியன் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘‘ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மூத்த தலைவரும் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னணித் தலைவருமான  சி.ஏ.குரியன் (88) காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். மூணாறு, பீர்மேடு பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாவலராக விளங்கியவர். கட்சியின் மாநில  நிர்வாகக்குழு, தேசியக்குழு உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் என பல நிலைகளில் சிறப்பாக செயல்பட்டவர்.அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வணக்கம் கூறி அஞ்சலி செலுத்துகிறது’ என கூறியுள்ளார்.

Related Stories: