இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை அதிகாரிகள் சிறப்பு குழு இன்று சென்னை வருகை

சென்னை: இங்கிலாந்து பிரதமர் அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி, தமிழகம் வருகிறார். அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்நாட்டின் சிறப்பு குழுவினர் இன்று சென்னை வருகின்றனர்.இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது அவர் தமிழகம் வருகை தருகிறார்.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமரின் பாதுகாப்பு சிறப்பு உயரதிகாரிகள்  உட்பட 7 பேர் கொண்ட அட்வான்ஸ் குழுவினர் இன்று காலை சென்னை வருகின்றனர். பின்னர் இவர்கள் டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மதுரை செல்கின்றனர். மதுரையில் ஆய்வை முடித்துவிட்டு  இன்று இரவு 8.30 மணிக்கு  விமானத்தில் சென்னை திரும்புகின்றனர்.  நாளை இங்கிலாந்து பிரதமர் வந்து இறங்கும் பழைய விமான நிலையம், தங்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனர். பின்னர் ஆய்வை முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை பகல் 1.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம்  புனேக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

Related Stories:

>