×

விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ். இவர், தேமுதிகவில் துணை செயலாளராக இருந்து வருகிறார். தேர்தலில் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மற்றும் வேட்பாளர்கள் நேர்காணலிலும் பங்கேற்றார். தொடர்ந்து, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தார். மேலும் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனையும் எடுத்துக்கொண்டார். இந்நிலையில், நேற்று பரிசோதனை அறிக்கை முடிவு வந்தது. அதில் எல்.கே.சுதீஷுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, உடனடியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எல்.கே.சுதீஷுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இரு நாட்களுக்கு முன்னர்தான் பிரேமலதாவுடன் வேட்பு மனு தாக்கலில் கலந்துகொண்டார். பிரசாரமும் செய்தார். இதனால் தேமுதிகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags : Vijaykanth ,LK Sudheesh , Vijaykanth's brother-in-law Corona to LK Sudesh: Admission to a private hospital
× RELATED அதிமுக-தேமுதிக இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது!!