இந்தியா - சீனா இருநாடுகளும் போரின் விளிம்பில் உள்ளதாக அமெரிக்கா கருதவில்லை - பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின்

டெல்லி: இந்தியா - சீனா இருநாடுகளும் போரின் விளிம்பில் உள்ளதாக அமெரிக்கா கருதவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஜேம்ஸ் ஆஸ்டின் - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்தியா - அமெரிக்க பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்திய பின் கூட்டறிக்கையை வெளியிட்டு ஆஸ்டின் பேசியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா இதுவரை வாங்கவில்லை என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான நல்லுறவை எப்போதும் அமெரிக்கா மிகவும் மதிக்கிறது. உலகின் எந்த பகுதியாக இருந்தாலும் மனித உரிமைகளும், சட்டத்தின் ஆட்சியும் அமெரிக்காவுக்கு மிக முக்கியம் என ஆஸ்டின் தெரிவித்துள்ளார். இருநாடுகளின் பேச்சுவார்த்தையின் போது பிறநாடுகள் மீதான பொருளாதார தடை குறித்து பேசவில்லை என்று ஆஸ்டின் கூறியுள்ளார்.

Related Stories:

>