இன்று கடைசி டி.20 போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?..சவாலுக்கு காத்திருக்கும் இங்கிலாந்து

அகமதாபாத்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் அகமதாபாத் மோடி ஸ்ேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் மற்றும் 3வது போட்டியில் இங்கிலாந்தும், 2 மற்றும் 4வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் 2-2 என தொடர் சமனில் இருக்க 5வது மற்றும்கடைசி டி.20 போட்டி இன்று இரவு 7மணிக்கு நடக்கிறது. தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் இரு அணிகளும் களம் காண்கின்றன. முதல் 3 போட்டியிலும் சேசிங் செய்த அணியே வெற்றி பெற்ற நிலையில், 4வது போட்டியில் இந்தியா முதலில் வெற்றி பெற்றது நம்பிக்கை அதிகரித்துள்ளது. பனியின் தாக்கம் இருந்தபோதிலும் இந்தியா 180 பிளஸ் ரன் எடுத்ததால் போராடி வென்றது.

அந்த போட்டியில் அறிமுக வீரர் சூர்யகுமார் அதிரடியில் மிரட்டினார். கே.எல்.ராகுல் பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். மிடில்ஆர்டரில் ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பலம் சேர்க்கின்றனர். நடராஜன் காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்தாலும் அவர் இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகம்தான். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. ஒருவேளை ராகுல் சாஹருக்கு பதிலால் சாஹல் இடம்பெறலாம். உலக கோப்பை டி.20 தொடருக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி டி.20 போட்டி இதுதான் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மறுபுறம் நம்பர் ஒன் அணியான இங்கிலாந்து பேட்டிங் பந்துவீச்சில் மிரட்டுகிறது. ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்டோவ், பென்ஸ்டோக்ஸ் அதிரடியில் இந்திய பவுலர்களுக்கு கிலி ஏற்படுத்தி வருகின்றனர். பந்து வீச்சில் மார்க்வுட், ஆர்ச்சர் அச்சுறுத்துகின்றனர். இங்கிலாந்து எளிதாக விட்டுக்கொடுக்காது என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 2019ம் ஆண்டுக்கு பின் இந்தியா விளையாடிய உள்ள 7 டி20 தொடரில் 6ஐ கைப்பற்றி உள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 3-0, வங்கதேசத்துடன் 2-1, வெஸ்ட் இண்டீஸ் 2-1, இலங்கை 2-0, நியூசிலாந்து 5-0, ஆஸ்திரேலியா 2-1 என கைப்பற்றிய நிலையில், தென் ஆப்ரிக்காவுடன் 1-1 என சமன் செய்தது. இதனால் இன்று வெற்றியை தக்க வைக்குமா என பார்ப்போம்.

Related Stories:

>