×

கொரோனா காலத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி: ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்

மும்பை: கடந்த ஆண்டு கொரோனா பரவலால் ஊரடங்கு சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்பவும், இன்னும் எண்ணற்ற நல உதவிகளையும் செய்த நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

கொரோனா நெருக்கடி காரணமாக பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். மேலும் அத்தகைய தொழிலாளர்களுக்காகத் தனியாக வேலைவாய்ப்பு தளம் ஒன்றையும் உருவாக்கினார்.

பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார். சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளை கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் அமைத்து கொடுத்தார்.

சோனு சூட் செய்த நல உதவிகளைப் பாராட்டி அவருக்குப் பல்வேறு விருதுகள், கவுரவங்கள் வழங்கப்பட்டுள்ளன. தெலங்கானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் அவருக்குக் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. தற்போது ஸ்பைஸ்ஜெட் விமானச் சேவை நிறுவனமும் சோனு சூட்டைப் பாராட்டும் வண்ணம் தங்களது விமானத்தில் அவரது முகத்தைப் பதித்து நன்றி தெரிவித்துள்ளது.

Tags : Sonu Suite ,Spisjet , Sonu Sood, SpiceJet, Corona
× RELATED கொரோனா சிகிச்சைக்காக ஆந்திராவில்...