×

மூன்று முறை விமானப் படிக்கட்டில் தடுக்கி விழுந்த ஜோ பைடன்... யாரும் உதவவில்லை

வாஷிங்டன்: அமெரிக்காவின் அட்லாண்டாவில் மசாஜ் சென்டர் ஒன்றில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஆசிய-அமெரிக்க சமூகத்தினரிடம் பேச ஜோ பைடன் வாஷிங்டனில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் புறப்பட்டார்.
விமானப் படிக்கட்டுகளில் ஏறும் போது அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் மூன்றுமுறை தடுக்கிய நிலையில் ஒரு முறை கீழே விழுந்தார். அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் அடுத்தடுத்து கால்கள் தடுக்கி விழும் காட்சிகள் சமூக இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் விமானத்தின் படிக்கட்டுகளில் அவசரம் அவசரமாக ஜோ பைடன் ஏறியதால் 2 முறை தடுக்கியதுடன், கடைசியாக தடுக்கி விழுந்தே விட்டார்.

அட்லாண்டா செல்வதற்காக விமானம் மூலம் புறப்படும் ஜோ பைடன் தடுமாறி விழ எழுந்திருப்பதை காணலாம். சமாளித்துக்கொண்டு மீண்டும் படியேற, இரண்டாவது முறையும் தடுமாறுகிறார் விழுகிறார். மீண்டும் படிக்கட்டுகளில் தொடர்ந்து ஏற, மூன்றாவது முறை தடுமாறி விழுந்தே விடுகிறார். விழுந்து, எழுந்து, பாவம்போல முழங்கால்களை தடவிக்கொண்டு, தொடர்ந்து ஏறி விமானத்தின் கதவுக்கருகே நின்று, ஒரு சல்யூட் வைத்துவிட்டு ஜோ பைடன் உள்ளே செள்கிறார். ஜோ பைடன்  மூன்று முறை தடுமாறியும், மூன்றாவது முறை விழுந்தும் யாரும் அவருக்கு உதவச் சென்றது போல தெரியவில்லை. இன்னொரு விடயம், இந்த செய்தியை அமெரிக்க ஊடகங்கள் எதுவும் தங்கள் பத்திரிகைகளில் முக்கியப்படுத்தவில்லையாம்.

வெளிநாட்டு ஊடகங்கள்தான் பைடன் விழுந்ததை பெரியதாக செய்தியாக்கியுள்ளன. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை வட்டாரமோ, ஜோ பைடன் காற்று பலமாக வீசியதால் தடுமாறியதாக தெரிவித்துள்ளது. சமீபத்தில்தான் தனது நாயுடன் வாக்கிங் சென்ற பைடன் விழுந்து காலை உடைத்துக் கொண்டார். இப்போது விமானத்தில் ஏறும்போது, மீண்டும் தடுக்கி விழுந்துள்ளார். இன்னொரு பக்கம் பேச்சில் தடுமாறுகிறார். அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வயதுடைய ஜனாதிபதி  பைடன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Joe Biden , Joe Biden, who stumbled three times ... no one helped
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை