திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் இரும்பு கம்பிகள் தயாரிக்கும் ஆலையில் 250 தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் செயல்பட்டு வரும் இந்த தனியார் இரும்பு குடோனில் தற்போது 250க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 19 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது அடுத்து முதற்கட்டமாக திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட பின்னர் இந்த 19 நபர்களை அவர்களது வீட்டிலேயே தடுமைப்படுத்தி சிகிச்சையளித்து வருகின்றனர்.

Related Stories:

More