×

இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை: ஓபிஎஸ், ஈபிஎஸ், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்பு

சென்னை: எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. தொடர்ந்து ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது. இதேபோல் கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில்பாலாஜி, எம்.ஆர். விஜயபாஸ்கர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. வேலூர் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பூவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. அவிநாசி தனி தகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தனபாலன் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது. இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமானின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு ஏற்கப்பட்டது. கோபிச்செட்டிபாளையத்தில் - செங்கோட்டையன், விழுப்புரம் - சி.வி. சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. மதுரை மேற்கில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூவின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.

தொண்டாமுத்தூரில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வேட்புமனுவில் குளறுபடி உள்ளதாக திமுக புகார் அளித்துள்ளது. வேலுமணியின் சொத்து விவரங்கள் சரியாக இல்லை என திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்துள்ளார்.

நெல்லை அமமுக வேட்பாளர் பால் கண்ணன் என்கிற பி.பாலகிருஷ்னன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. பால் கண்ணனின் வேட்பு மனுவை முன்மொழிந்த 10 பேரில் 3 பேர் தொகுதி வாக்காளர்கள் அல்ல என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்மொழிந்தவர்களின் பாகம் எண் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றனர். திருநெல்வேலி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகிருஷ்ணமூர்த்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கோவை தெற்கில் கமல்ஹாசன், விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தொண்டாமுத்தூரில் நடிகர் மன்சூர் அலிகான், ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

ராயபுரம் - ஜெயக்குமார், ஆயிரம் விளக்கு - எழிலன் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் முறையாக இல்லை என்று சைதை துரைசாமி மீது 5க்கும் மேற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அரவக்குறிச்சியில் அண்ணாமலை வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

Tags : OBS ,EPS ,MK Stalin ,Thuraimurugan , Candidate
× RELATED ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த...