மதுரை மேலூர் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு மதுபான கடையில் கையாடல்: 4 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

மதுரை: மேலூர் அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு மதுபான கடையில் கையாடல் செய்த 4 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலாளர் மார்ஜியனா தணிக்கை செய்தபோது மதுபானங்களின் இருப்புத்தொகையில் ரூ.21 லட்சம் கையாடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலாளர் அளித்த புகாரின் பேரில் மகாமுனி, அண்ணாதுரை, காதர்பாஷா, ஆறுமுகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: