×

திமுக திட்டங்கள் 100% நிறைவேற்றப்படும்: மயிலை த.வேலு பிரசாரம்

சென்னை: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மயிலை.த.வேலு, கடந்த 14ம் தேதி முதல் தொகுதி முழுவதும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, நேற்று 122வது வட்டம் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி நகர் (எஸ்.எம்.நகர்), ஆலையம்மன் கோயில் தெரு, ரங்கூன் ெதரு, ஜோதி தோட்டம், குளங்கரை சாலை, பரூவா நகர், பாரதிதாசன் சாலை, சீத்தாம்மாள் காலனி, ஆழ்வார்பேட்டை தெரு, அருந்ததியர் நகர், திருவள்ளூவர் நகர், சித்தரஞ்சன் சாலை, செனட்டாப் சாலை, அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி மயிலலை த.வேலு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

குறிப்பாக, மகளிருக்கு மாதம் ₹1000, கொரோனா பாதிப்பு காரணமாக ரேஷன் கார்டுக்கு ₹4000, சிலிண்டருக்கு ₹100 மானியம், கல்விக்கடன் ரத்து, மகளிர் சுய உதவிக் குழு கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு வேலை, மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள், மீனவர் சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும், சொந்தமாக ஆட்டோ வாங்க ₹10 ஆயிரம் அரசு மானியம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு அமைந்தவுடன் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் 100 சதவீதம் நிறைவேற்றப்படும், என உறுதியளித்தார்.

வழிநெடுகிலும் அவருக்கு பொன்னாடை போர்த்தி, மலர்தூவி வரவேற்ற பொதுமக்கள் எங்களுடைய வாக்குகள் அனைத்து திமுகவிற்கு தான், என வாக்குறுதி அளித்தனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Tags : Mayilai ,T.Velu , DMK projects will be implemented 100%: Mayilai T.Velu campaign
× RELATED கடமலை-மயிலை பகுதியில் தேன் பெட்டிகளை சேதப்படுத்தும் கரடிகள்