அகில இந்திய டென்னிஸ் போட்டி வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை

திருவள்ளூர்: தேசிய அளவிலான 12 வயதிற்குட்பட்ட பெண்கள் டென்னிஸ் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த டென்னிஸ் போட்டியில் சென்னை வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளியில் பயிலும் 6ம் மாணவி ஹரிதாஸ்ரீ கலந்துகொண்டு 6 - 0, 6 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தார். 12 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் அகில இந்திய டென்னிஸ் தரவரிசை போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை வென்ற மாணவி ஹரிதாயின் சாதனையை பாராட்டி பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories:

>