வாலாஜாபாத் ஒன்றியத்தில் முழுமையாக அழிக்காத சுவர் விளம்பரங்கள்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில், முழுமையாக அழிக்கப்படாத சுவர் விளம்பரங்கள் உள்ளன. இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனா் என புகார் எழுந்துள்ளது. வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தோத்ல் நடக்க உள்ளது. இதையொட்டி, அனைத்து பகுதிகளிலும் வட்டாட்சியர் தலைமையில், பறக்கும்படை அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது, இலவச பொருட்கள் வழங்குவதை தடுத்து பறிமுதல் செய்கின்றனர். மேலும், வேட்பாளர்களை கண்காணிக்க நிலைக்குழு அமைத்து, கண்காணித்து வருகின்றனா்.

இதற்கிடையில், பல இடங்களில் கட்சி கொடிகள் பெயர் பலகைகள், கல்வெட்டுகள், தலைவர் சிலைகள் மூடப்பட்டன. அதேபோல் போஸ்டர்களும், சுவர் விளம்பரங்களும் அழிக்கப்படுகின்றன. இந்நிலையில் வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள சில கிராமங்களில், ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சி போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் முழுமையாக அழிக்கவில்லை. ஏகனாம்பேட்டை பகுதியிலுள்ள முன்னாள் எம்எல்ஏ தொகுதி நிதியில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தின் பெயர் பலகையும் மறைக்கவில்லை. இடங்களில் அரசியல் கட்சி சுவர் விளம்பரங்களை கண்துடைப்புக்காக அழிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் கிராமங்களில், தேர்தல் விதிகளை மீறும் அரசியல் கட்சியினர் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்விதநடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள், புகார் அளித்தாலும், அதனை கண்டும் காணாமல் உள்ளனர் என குற்றங்சாட்டப்படுகிறது.

Related Stories: