‘‘அமமுக பற்றி கேட்டால் சட்டுனு அடிச்சிடுவேன்...’’ பத்திரிகையாளர்களுக்கு ராஜேந்திரபாலாஜி மிரட்டல்

விருதுநகர்: அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடித்து விடுவேன் என பத்திரிகையாளர்களிடம் மிரட்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, திருவில்லிபுத்தூரில் நேற்று நடந்த அதிமுக தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், அமைச்சரிடம் ஒரு நிருபர் அமமுக பற்றி கருத்து கேட்க, அமைச்சர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ‘‘இந்தா பாரு... அமமுக பற்றி கேட்கிற மாதிரி இருந்தா இப்பவே கிளம்பிரு... இல்ல சட்டுனு அடிச்சிருவேன்.

தேவையில்லாத பிரச்னையை இழுத்து விட்றீங்க. நானும் வாய்க்கு வந்தத பேசிடுறேன். பின்னாடி நான்தான் அவஸ்ைதப்பட வேண்டி கிடக்கு. அதான் உங்களுக்கு நான் பேட்டியே கொடுக்குறதில்லை’’ என பத்திரிக்கையாளர்களை பார்த்து மிரட்டும் தொனியில் பேசினார். இதைக்கேட்டு பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  பின்னர் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

Related Stories:

>