ஓல்டை எல்லாம் ஓரங்கட்டுங்கப்பா...! சீனியர்களை சீண்டும் பழநி அதிமுக வேட்பாளர்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி சட்டமன்ற தொகுதி தங்களுக்கே கிடைக்குமென்ற எண்ணத்தில், மாவட்டத் தலைவர் கனகராஜை வேட்பாளராக அறிவித்தது பாஜ. தேர்தல் பணிகளும் ஜரூராக நடந்தது. இங்கேதான் திடீர் ட்விஸ்ட் ஆக, முன்னாள் எம்எல்ஏ குப்புச்சாமி மகன் ரவி மனோகரன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த அதிமுக மாஜி எம்எல்ஏ வேணுகோபால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத, எந்த நிகழ்ச்சி, போராட்டங்களில் பங்கேற்காத, தொழிலதிபர் என்பதற்காக சீட் வழங்குவதா என அதிமுகவில் ஒரு தரப்பு கொந்தளிக்கிறதாம்.

அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், வேட்பாளர் ரவி மனோகரன், கட்சியின் சீனியர்களை தவிர்த்து விட்டு, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். அவர்களின் வழிகாட்டுதலின்படியே, சீனியர்களை கண்டுகொள்வதில்லை என்ற பேச்சு தொகுதி முழுக்க பரவுகிறது. இதனால், சீனியர்களான முன்னாள் எம்பி குமாரசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் சுப்புரத்தினம், வேணுகோபால், நகரச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோருக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லையென்ற ஆதங்கத்தில் இருக்கின்றனர். கட்சிப்பணிகளிலும் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால் பழநியில் அதிமுக இம்முறையும் கட்டாயம் ேதாற்குமென அதிமுக தொண்டர்களே பேசி வருகின்றனர்.

Related Stories:

>