×

நச்சுனு 4 கேள்வி எதிரே யார் நின்றாலும் வெற்றி திமுகவிற்கே: எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன்

1 ஜான்பாண்டியன் தென்மாவட்டத்தில் இருந்து ஆட்களை இறக்கியதாக கூறுகிறார்களே?
அதுகுறித்து எனக்கு சரியாக தெரியவில்லை, ஆனால் சிலர் கூறுகிறார்கள், அப்படி அது உண்மையென்றால், தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு பின்னரும், அதுபோன்ற வெளியாட்கள் யாரேனும் இருந்தால், காவல்துறையும், தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஜாதி கட்சியின் தலைவரான ஜான்பாண்டியன், உங்களுக்கு எதிர் வேட்பாளராக நிற்பது எப்படி உள்ளது?
தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதிகளில் யார் வேண்டுமானாலும், எந்த தொகுதியிலும் போட்டியிடலாம், கூட்டணி கட்சியின் உடன்பாட்டில் இங்கே போட்டியிடுகிறார். அது ஜனநாயக உரிமை.  திமுக மக்களை நம்பி உள்ளது, மக்களுக்காக பணியாற்றும் இயக்கம் என்பதால் தான் கடந்த காலங்களில் கூட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு வெற்றிபெற்றுள்ளார்கள். அதனால் களத்தில் எதிரே போட்டியாளர்கள் யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்.

3 ஜான்பாண்டியனுக்கு கூட்டணியில் உள்ள அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது உங்களுக்கு ஆதரவாக உள்ளதா?
இது உட்கட்சி விஷயம், நான் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. எனக்கு என் தொகுதி மக்கள் மீதும், வாக்காளர்கள் மீதும் உறுதியும் நம்பிக்கையும் உள்ளது. எழும்பூர் என்னுடைய சொந்த தொகுதி.

4எழும்பூரில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
எழும்பூர் தொகுதியை பொறுத்தவரை திமுகவின் கட்டமைப்பு வலுவாக உள்ளது. இந்த தொகுதியில் குடிசை, சாலையோரம் வாழ்ந்தவர்களுக்கு திமுக ஆட்சியில்தான் குடிசைமாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. மக்களின் அடிப்படை தேவைகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதால் தலைமுறை, தலைமுறையாக திமுகவின் வாக்கு வங்கியாக இந்த தொகுதி உள்ளது. இதனால் எழும்பூர் திமுகவிற்கு பலமான தொகுதியாக உள்ளது.

Tags : Naisunu ,Vimpur ,Paranthaman , Toxic 4 Whoever stands against the question Victory goes to DMK: Egmore constituency DMK candidate Barandaman
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா...