இன்று கடைசி டி20 தொடரை வெல்லப்போவது யாரு?.. இந்தியா இங்கிலாந்து மோதல்

அகமதாபாத், மார்ச் 20: டி20 தொடரில்  2-2 என்று சமநிலையில் உள்ள இந்தியா, இங்கிலாந்து அணிகள் தொடரை வெல்ல வாய்ப்புள்ள கடைசி ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. அகமதாபாத்தில் நடந்து  வரும் 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதுவரை முடிந்துள்ள 4 ஆட்டங்களில் இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி மற்றும் 5வது டி20 இன்று நடக்கிறது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய விராத் தலைமையிலான இந்தியா டி20 தொடரையும் கைப்பற்ற முனைப்புக் காட்டும். அதேபோல் டெஸ்ட் தொடரை இழந்த இங்கிலாந்து, மோர்கன் தலைமையில் டி20 தொடரை வெல்ல வேகம்  காட்டும்.

அதற்கு ஏற்ப இங்கிலாந்து அணியில் எந்த வரிசையில்  தடுமாற்றம் ஏற்பட்டாலும், அடுத்த வரிசை கை கொடுத்து காப்பாற்றுகிறது. அதிலும் 4வது போட்டியில் கடைசி  வரிசையில் களம் கண்ட ஜோப்ரா, இந்தியாவை மிரட்டி  விட்டார்.

அதே நேரத்தில் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பினாலும், நடுவரிசை வீரர்கள் கோஹ்லி, ஸ்ரேயாஸ், ரிஷப், ஹர்திக் ஆகியோர் சிறப்பாக விளையாடி அவ்வப்போது இந்திய அணியை கரை சேர்த்து வருகின்றனர். ஆனால் பந்து வீச்சை பொருத்தவரை 2 அணிகளும் சமபலத்தில்தான் இருக்கின்றன. ஒரு போட்டியில் மிரட்டுகின்றன. அடுத்த போட்டியில் கோட்டை விடுகின்றன. எப்படியிருந்தாலும் தொடர் வெற்றியை முடிவு செய்யப் போகும் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

மாறி...மாறி

தொடரில் இரு அணிகளும் ஒரு ஆட்டத்தில் வெற்றி, ஒரு ஆட்டத்தில் தோல்வி என ‘மாறி... மாறி..’ வெற்றித் தோல்விகளை சந்தித்து வருகின்றன. அதுமட்டுமல்ல இந்த இரு அணிகளும் கடைசியாக மோதிய 8 போட்டிகளிலும் இப்படிதான் முடிவுகள் ‘மாறி... மாறி’ வந்து இருகின்றன. அதனால் இன்றைய போட்டி இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கலாம்.

தொடர் வெற்றி

2019ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த 7 டி20 தொடர்களில் ஒன்றைக் கூட இந்தியா இழக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ்(3-0), தென் ஆப்ரிக்கா(1-1), வங்கதேசம்(2-1), வெஸ்ட் இண்டீஸ்(2-1), இலங்கை(2-0), நியூசிலாந்து(5-0), ஆஸ்திரேலியா(2-1)  நாடுகளுக்கு எதிரான எல்லா தொடர்களிலும் இந்தியா சாதித்திருக்கிறது. அதனால் இன்றைய போட்டியிலும் இந்தியா வென்று, தொடர்ந்து 8வது தொடரிலும் சாதிக்கும்.

Related Stories:

>