×

தனலட்சுமி மீண்டும் சாதனை

பாட்டியலாவில் 24வது தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பெண்களுக்கான 200மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை எஸ்.தனலட்சுமி தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்தார். தங்க மங்கை பி.டி.உஷா 1998ம் ஆண்டு சென்னையில் நடந்த போட்டியில் 23.20 விநாடிகளில் கடந்ததே இதுவரை  தேசிய சாதனையாக இருந்தது. இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் ஹிமா தாஸ்(24.29விநாடி) இந்தப்போட்டியில் 2வது இடத்தை பிடித்தார். ஏற்கனவே தனலட்சுமி 100மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவின் டுட்டி சந்தை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

* ஜப்பானில் இந்த ஜூலை மாதம் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியை காண வெளிநாட்டைச் சேர்ந்த ரசிகர்களை அனுமதிக்கப் போவதில்லை. அதுகுறித்து இன்று டோக்கியாவில் நடைபெற உள்ள ஜப்பான் அரசு, டோக்கியோ மாநகர நிர்வாகம், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், உள்ளூர் அமைப்பு, சர்வதேச பாராலிம்பிக் நிர்வாகம் என 5தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படும்.

* மெக்சிகோவின் அகபுல்கோ நகரில்  மெக்சிகன் ஓபன் டென்னிஸ் போட்டி  நடக்கிறது. அதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்(5வது ரேங்க்) 7-5, 4-6, 6-3 என்ற செட்களில் கனடாவின் பெலிக்ஸ் அகெரை(18வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்

Tags : Dhanalakshmi , Dhanalakshmi's record again
× RELATED ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பது...