×

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் டி20 தொடர்: வாஷிங்டன் சுந்தர் நடராஜனுக்கு வாய்ப்பு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் இன்றுடன் முடிகிறது. அடுத்து 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள்  தொடரில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடும். இந்த 3 ஆட்டங்களும் மார்ச் 23, 26, 28 தேதிகளில் பூனாவில் பூட்டிய அரங்கில் நடக்கும். இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கர்நாடகா வேகம் பிரசித் கிருஷ்ணா முதல் முறையாக சர்வதேச போட்டியில் அறிமுகமாகிறார். ஏற்கனவே டி20 போட்டிகளில் அறிமுகமான க்ருணால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இப்போது ஒருநாள் அணியில் அறிமுகமாகின்றனர்.

முகமது சிராஜ் 2 ஆண்டுகளுக்கு பிறகும், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 ஆண்டுகளுக்கு பிறகும் ஒருநாள் அணிக்கு தேர்வாகி உள்ளார். காயம் காரணமாக டி20 தொடருக்கான அணியில் தாமதமாக இணைந்த தமிழக வீரர் நடராஜன் இப்போது ஒருநாள் அணியிலும் இடம் பிடித்துள்ளார். கல்யாணம் காரணமாக பும்ராவும், காயம் காரணமாக ஷமி, ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம் பெறவில்லை. விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் 8 இன்னிங்சில் 827ரன் குவித்த பிரித்வி ஷா, 7 இன்னிங்சில் 737 ரன் அள்ளிய தேவதூத் படிக்கல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அணி விவரம்
விராத் (கேப்டன்), ரோகித்(துணைக் ேகப்டன்), தவான், ஷூப்மன், ஸ்ரேயாஸ், சூர்யகுமார், ஹர்திக் , ரிஷப்(விக்கெட் கீப்பர்), ராகுல்(விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் , க்ருணால், வாஷிங்டன், நடராஜன், புவனேஷ்வர், சிராஜ்,  பிரசித் கிருஷ்ணா, ஷர்துல்.

* ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தொடர் மகளிர் இரட்டையர் பிரிவு  காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை  22-24, 12-21 என நேர் செட்களில் நெதர்லாந்தின் செலீனா பிக்-செரில் செனேன் இணையிடம் தோல்வி அடைந்தது. ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஒன்றில் இந்தியாவின்  லக்‌ஷா சென்(28வது ரேங்க்), நெதர்லாந்தின் மார்க் கல்ஜாவ்(36வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் மார்க் 21-17, 16-21, 21-17 என்ற செட்களில் போராடி வென்றார்.

Tags : ODI T20 ,England ,Washington ,Sundar Natarajan , ODI T20 series against England: Opportunity for Washington Sunder Natarajan
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்