மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரகாஷ் காரத், பிருந்தா காரத் கே.பாலகிருஷ்ணன் பிரசாரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை: அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் வரும் 29ம் தேதி காலை 10.30 மணி துறைமுகம், மாலை 4 மணிக்கு  ஆயிரம்விளக்கு, மாலை 6 மணிக்கு கொளத்தூர் பொதுக்கூட்டம், 30ம் தேதி மாலை 4 மணிக்கு தாராபுரம், மாலை 6 மணிக்கு திருப்பூர் வடக்கு, இரவு 8 மணிக்கு கோவை தெற்கு பொதுக்கூட்டங்கள். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வரும் 26ம் தேதி மாலை 6 மணிக்கு மதுரை பொதுக்கூட்டம். (மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி) இரவு 8.30 மணிக்கு திருப்பரங்குன்றம் பொதுக்கூட்டம், 27ம் தேதி காலை 10.30 மணி தூத்துக்குடி, இரவு 7 மணிக்கு கோவில்பட்டி பொதுக்கூட்டம்.

மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் 20ம் தேதி மாலை திண்டுக்கல், ஆத்தூர், 21ம் தேதி கந்தர்வகோட்டை பிரசார மற்றும் பொதுக்கூட்டம், 22ம் தேதி மாலை ராஜபாளையம், விருதுநகரில் பொதுக்கூட்டம், 23ம் தேதி மாலை திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம், 24ம் தேதி மாலை 5 மணிக்கு நாகப்பட்டினத்திலும், மாலை 6 மணிக்கு கீழ்வேளூரிலும், இரவு 7 மணிக்கு திருத்துறைப்பூண்டியிலும், 25ம் தேதி மாலை 6 மணிக்கு காட்டுமன்னார்குடியிலும், 7 மணிக்கு புவனகிரியிலும், இரவு 8 மணிக்கு சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

Related Stories:

>