×

திரு.வி.க. நகரில் அனுபவம் இல்லாதவருக்கு வாய்ப்பு திமுகவில் இணைய ஞானசேகரன் முடிவு: ஜி.கே.வாசன் மீது குற்றச்சாட்டு

சென்னை: தமாகாவில் இருந்து வெளியேறிய ரயில்வே ஞானசேகரன் திமுகவில் இணைய முடிவெடுத்துள்ளார். அனுபவம் இல்லாத ஒருவரை திருவிக நகரில் நிறுத்தியுள்ளார் என்று ஜி.கே.வாசன் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளார். தமாகா பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தவர் ரயில்வே ஞானசேகரன். இவர், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து ரயில்வே ஞானசேகரன் சென்னை பிரஸ் கிளப்பில் நிருபர்களிடம் கூறியதாவது:   தமாகா சரிவில் போய்க் கொண்டிருந்த நேரத்தில் ஜி.கே.வாசன் தனது கட்சியில் இணையுமாறு என்னை கேட்டார். அதை ஏற்று தமாகாவில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தேன். தமாகா வளர்ச்சிக்கு துணை நின்றேன்.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் அறிவித்தவுடன் ஜி.கே.வாசனை சந்தித்து எனது சொந்த தொகுதியான திரு.வி.க நகரில் போட்டியிட வாய்ப்பளிக்க கேட்டேன். அதன்படி கூட்டணி கட்சியான அதிமுக, திரு.வி.க நகரை தமாகாவிற்கு ஒதுக்கியது. அதனால் எனக்கு வாய்ப்பு தருவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் தமாகா சார்பில் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இத்தொகுதியில் கட்சி ரீதியாக மட்டுமல்லாமல் எனக்கு மட்டும் 25 ஆயிரம் வாக்குகள் இருக்கிறது. ஆனால் அனுபவமே இல்லாத ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

எனவே, தமாகாவில் தொடர்ந்து செயல்படுவது எந்தவிதத்திலும் பயன் இல்லை. எனவே தமாகாவில் இருந்து விலகி விட்டேன். திமுக தேர்தல் அறிக்கையில் எங்கள் கோரிக்கைகள் எல்லாம் இடம் பெற்றிருக்கிறது. எனவே திமுகவை ஆதரிக்கிறோம். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முடிவெடுத்துள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Dimu ,Wasson , DMK, Gnanasekaran, GK Vasan
× RELATED வீண் வதந்திகளுக்கு கர்நாடகா...