×

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக துண்டு பிரசுரத்துடன் ரூ.500 பணம் பட்டுவாடா...வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை: சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக துண்டு பிரசுரத்துடன் ரூ.500 பணம் பட்டுவாடா வழங்கிய வீடியோ ெவளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல விருகம்பாக்கம் தொகுதியிலும் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பரிசு பொருட்களை வழங்கி வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் இந்த தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாமகவில் மாநில துணை தலைவர் கஸ்ஸாலி போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால் இந்த தொகுதியில் பிரசாரம் களைக்கட்டியுள்ளது. அதே நேரத்தில் தற்போது ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அதிமுகவை சேர்ந்த சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜெ.எம்.பஷீர் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது போல வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

ஒரு வீட்டில் பெண்களை வரிசையாக அழைத்து பணம் பட்டுவாடா நடக்கிறது. வரிசையில் வரும் பெண்களிடம் அதிமுக துண்டு சீட்டுடன் ரூ.500 வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் சேப்பாக்கம் தொகுதியில் தான்  இருக்கிறீர்களா? என்று கேட்ட பின்னர் அதிமுகவினர் பணத்தை வழங்குகின்றனர். பணம் வாங்கியவர்களிடம் திரும்ப, திரும்ப ரிட்டன் வராதீர்கள் என்று பேசும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அதிமுகவினர் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள் தான் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பகுதி முழுவதும் பணம் பட்டுவாடா நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே போல விருகம்பாக்கம் தொகுதி முழுவதும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்குவதாக திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Chappakak-Thiruvilikani , AIADMK leaflet in Chepauk-Tiruvallikeni constituency Rs. 500 will not be paid ... Video released has caused a stir
× RELATED எந்த பிரசாரமும் பலிக்காததால் ‘நான் கடவுள்’ என்ற மோடி: முத்தரசன் தாக்கு