×

கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு.: கான்கீரிட் பலகை தயாரிக்கும் பணியை நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

கீழ்பவானி: கீழ்பவானி கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கான்கீரிட் பலகை தயாரிக்கும் பணிகளை தடுத்து நிறுத்த விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து 200 கிலோ மீட்டர் தொல்லைக்கு செல்லும் கீழ்பவானி கால்வாயில் 2,07,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

திருப்பூர் மற்றும் கரூர் வரை செல்லும் கால்வாயில் ரூ. 240 மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் பணிகள் நடந்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கால்வாயில் கான்கீரிட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து பொதுப்பணிக்கு சொந்தமான இடத்தில் ஒன்றாக திரண்ட விவசாயிகள் கான்கீரிட் பலகை தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் முடியும் வரை பணிகளை நிறுத்தி வைக்குமாறும், அதன் பின் அமையும் அரசிடம் பேசி பிரச்னைக்கு தீர்வு தேடி கொள்ளவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : UNDAWANI Canal , Farmers protest against concrete floor in Keelpavani canal: Farmers demand halt to concrete slab production
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு...