×

மேற்குவங்க மக்களுக்கு துரியோதனனும், துச்சாதனனும் தேவையில்லை!: பாஜக-வுக்கு விரைவில் பிரிவு உபசார விழா.. மம்தா பானர்ஜி தாக்கு..!!

மிட்னாபூர்: மேற்குவங்க மக்களுக்கு துரியோதனனும், துச்சாதனனும் தேவையில்லை என்று அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்குவங்கத்தில் உள்ள கிழக்கு மிட்னாபூரில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, விரைவில் பாரதிய ஜனதா கட்சிக்கு  பிரிவு உபசார விழா நடத்தப்படவிருப்பதாக கூறியுள்ளார். மேற்குவங்க மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி வேண்டாம் என்றும் மோடியின் முகத்தை பார்க்க தங்கள் யாரும் விரும்பவில்லை என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கலவரங்கள், கொள்ளையர்கள், துரியோதனன், துச்சாதனன் மற்றும் கிழக்கிந்திய கம்பெனிக்கு சாதகமாக இருந்த மேற்குவங்க நவாப் மிர் ஜாஃபர் என யாரும் தங்களுக்கு தேவையில்லை என்று மம்தா தெரிவித்திருக்கிறார். மோடி அரசில் எல்லாம் தனியார் மயமாகி கொண்டுவருவதாக அவர் குற்றம்சாட்டினார். இதுகுறித்து தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா, மோடி அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது. ரயில்வே துறை தனியார் மயமாகிறது. அத்துடன் காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயமாகின்றன. துரியோதனன், துச்சாதனனை போன்றது பாஜக என்று குறிப்பிட்டார்.

அதே மிட்னாபூரில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பிரச்சாரம் மேற்கொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்றால் பயங்கரவாதம், கொலை, ஊழல் என்று பொருள் என்று அவர் கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மே 2ம் தேதிக்கு பிறகு ஒருவரும் தப்பப் போவதில்லை என்று சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மம்தா என்றால் சர்வாதிகாரி, மக்கள் மீது கவலையற்றவர், பயத்தை பரப்புபவர் மற்றும் தகுதியற்ற முதலமைச்சர் என்றும் சிவராஜ் சிங் சவுகான் விமர்சித்தார்.

Tags : Duryodhana ,Ducādana ,!: ,Segmental Protest Festival ,Bhājaka ,Mamta Banerji , People of West Bengal, Duryodhana, Tussauds, Mamta Banerjee
× RELATED போளூர் அருகே துரிஞ்சிகுப்பத்தில் துரியோதனன் படுகளம், தீமிதி விழா