×

ஊட்டி மருத்துவமனை வளாகத்தில் ராட்சத மரங்கள் அகற்றும் பணி துவக்கம்

ஊட்டி : ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வளர்ந்துள்ள அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஊட்டியில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான மக்கள் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு சிகிச்சைகளுக்காக வருகின்றனர். இம்மருத்துவமனை வளாகத்தில், ஏராளமான ராட்சத மரங்கள் வளர்ந்துள்ளன. காற்று மற்றும் மழைக்காலங்களில் இந்த மரங்கள் விழுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், இந்த மரங்களை அகற்ற வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. அதேசமயம், நுழைவு வாயில் பகுதியில் உள்ள மரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. மேலும், அவசர சிகிச்சை பிரிவு பகுதியிலும் சில ராட்சத மரங்கள் உள்ளன. இந்த மரங்களையும் மருத்துவமனை நிர்வாகம் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ooty ,Hospital , Ooty: Work has started to remove the dangerous trees growing on the Ooty Government Hospital premises.
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்