‘அமமுக பற்றி கேட்டா சப்புனு அடிச்சிருவேன்’ : அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மிரட்டலால் நிருபர்கள் அதிர்ச்சி

திருவில்லிபுத்தூர் : ‘அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடிப்பேன்’ என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருவில்லிபுத்தூரில் நிருபர்களுக்கு மிரட்டல் விடுத்தார். இதனால் நிருபர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார். ராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மான்ராஜை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். மேலும் தேரடி தெரு அருகே அதிமுக தேர்தல் அலுவலகத்தை  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். பின் அமைச்சரிடம் நிருபர்கள் பேட்டி காண முயன்றனர். அதற்கு அமைச்சர், ‘நான் பேட்டி தர மாட்டேன். அமமுகவை பற்றி கேள்வி கேட்கிறதா இருந்தா இப்போவே கிளம்பியிருங்க.சப்புன்னு அடிச்சிருவேன் பார்த்துக்கோ. சும்மா தேவையில்லாத பிரச்சனைய கிளப்பிகிட்டு.’ என்று கூறினார். அமைச்சரின் இந்த அடாவடி பேச்சு, நிருபர்களிடையே மட்டுமின்றி, அதிமுக நிர்வாகிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>