×

திருவில்லிபுத்தூர் நகர் வீதிகளில் புத்துணர்ச்சிக்காக வாக்கிங் செல்லும் ஜெயமால்யதா-புத்துணர்ச்சிக்காக வாக்கிங் செல்லும் ஜெயமால்யதா

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் கோயில் யானை ஜெயமால்யதா, புத்துணர்ச்சிக்காக நகர் வீதிகளில் தினமும் அதிகாலையில் வாக்கிங் செல்கிறது.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பாகன்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட யானை புதிய பாகன்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைக்கு எவ்வித பிரச்னையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சிசிடிவி கேமரா மூலம் ஆண்டாள் கோயில் நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்டாள் கோயில் யானையின் புத்துணர்ச்சிக்காக அதிகாலை வேளையில் நான்கு ரத வீதி மற்றும் முக்கிய வீதிகளில் தினமும் வாக்கிங் செல்ல கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். தினமும் ஆண்டாள் கோயிலில் அதிகாலையில் நடைபெறும் விசுவரூப தரிசன சிறப்பு பூஜையில் பங்கேற்றுவிட்டு பிரகாரம் வழியாக வெளியே வந்து மாடவீதி நான்குரத வீதி உட்பட முக்கிய வீதிகளில் யானை வலம் வருகிறது. அப்போது ஆங்காங்கே உள்ள பக்தர்கள் யானைக்கு பழங்கள் கொடுக்கின்றனர். அதிகாலை வேளையில் யானை வாக்கிங் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என பாகன்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டாள் கோயில் யானை வாக்கிங் செல்வதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags : Jayamalyada ,Srivilliputhur Nagar , Srivilliputhur: Srivilliputhur Temple Elephant Jayamalyada walks the city streets early every morning for refreshment.
× RELATED திருவில்லிபுத்தூர் நகர் பகுதியில்...