×

ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைத்த சட்டத்தை எதிர்த்து தீபா வழக்கு : தமிழக அரசு பதில்தர ஐகோரட் உத்தரவு

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் இயற்றப்பட்ட ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டத்தை எதிர்த்து தீபா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், தமிழ்நாடு புரட்சி தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ள நிலையில், அவரது சகோதரி தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, தீபாவின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தீபக் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து  பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : Deepa , Jayalalithaa, Memorial, Government of Tamil Nadu, Icord, Order
× RELATED துர்க்கையின் நவ வடிவங்கள்!