×

பிரேசிலில் பேயாட்டம் ஆடும் கொரோனா.. ஆட்டம் காணும் அமெரிக்கா.. இந்தியாவில் மீண்டும் கிடுகிடு.. உலகளவில் பாதிப்பு 12.23 கோடியாக உயர்வு!!

ஜெனீவா,உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.23 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 12,23,55,262 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,86,48,972 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 27 லட்சத்து 02 ஆயிரத்து 316 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 21,003,974 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,132 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 30,358,880 உயிரிழப்பு -  5,52,347, குணமடைந்தோர் - 2,25,23,799
இந்தியா   -   பாதிப்பு- 11,513,945, உயிரிழப்பு -  159,405, குணமடைந்தோர் -  11,081,508
பிரேசில்   -   பாதிப்பு -11,787,600, உயிரிழப்பு -  287,795, குணமடைந்தோர் -   10,339,432
ரஷ்யா    -   பாதிப்பு - 4,428,239, உயிரிழப்பு -    93,824, குணமடைந்தோர் -   4,037,036
இங்கிலாந்து - பாதிப்பு - 4,280,882, உயிரிழப்பு -   125,926, குணமடைந்தோர் -   3,593,136

Tags : Corona ,Brazil ,US ,India , Brazil, Corona, USA, India
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!