திமுக வேட்பாளர் மயிலை த.வேலு பிரசாரம் நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்: மயிலாப்பூர் பகுதி மக்கள் வாக்குறுதி

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு பிரசாரத்தில் ஈடுபட்டபோது, பொதுமக்கள் மலர்தூவி வரவேற்று, நீங்கள் நம்ம வீட்டு பிள்ளை, எங்கள் ஓட்டுகள் உங்களுக்கு தான். நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம் என்று வாக்குறுதி அளித்தனர். வரும் சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளராக மயிலை த.வேலு போட்டியிடுகிறார். இவர், கடந்த 3 நாட்களாக மயிலாப்பூர் தொகுதியில் உள்ள ராமகிருஷ்ணபுரம் முண்டகக்கண்ணியம்மன் கோயில் தெரு, ரங்கநாதபுரம், நாயக்கர் தோட்டம், நாட்டு சுப்ராயன் தெரு, காந்தி நகர், சண்முகபுரம், வி.எஸ்.வி.கோயில் தெரு, நாட்டு வீராச்சி தெரு, கல்லுக்காரன் தெரு, மாதவ பெருமாள் கோயில் தெரு, 121வது வட்டத்தில் உள்ள 1 முதல் 6வது மெயின் ரோடு, துலுக்காணம் தோட்டம், ராகவன் தோட்டம், கோகுலம் காலனி, பி.எம்.தர்கா குடிசைப்பகுதி, லாயிட்ஸ் ரோடு, மெக்காபுரம், டாக்டர் நடேசன் ரோடு, ரோட்டரி நகர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ெதாடர்ந்து 4வது நாளாக நேற்று அதிகாலை மயிலாப்பூர் பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களை சந்தித்து வாக்கு சேகரித்தர். பின்னர் காலை 7மணிக்கு 125வது வட்டத்தில் உள்ள அம்பேத்கர் பாலம், ஏகாம்பரம் பிள்ளை தெரு, மீனாம்பாள் பிள்ளை தெரு, ஆறுமுகம் பிள்ளை தெரு, நைனார் நாடார் தெரு, கைலாசபுரம், காரணீஸ்வரர் கோயில் தெரு, காரணீஸ்வரர் பக்கோடா தெரு, பி.வி.கோயில் தெரு, பாட்ஷா தோட்டம், நொச்சிகுப்பம், நொச்சி நகர் ஆகிய பகுதிகளிலும், மாலையில் அம்பேத்கர் பாலம் போன்ற பகுதிகளிலும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். அதற்கு அப்பகுதி மக்கள் நீங்கள் நம்ம வீட்டு பிள்ளை, எங்கள் ஓட்டுகள் அனைத்தும் உங்களுக்கு தான். நீங்கள் வெற்றி பெறுவது நிச்சயம், என்று வாக்குறுதி அளித்தனர்.

Related Stories:

>