×

இந்திராகாந்தி இசை நீரூற்று சாலையில் ஆமை வேகத்தில் சாலை விரிவாக்கப்பணிகள்

பெங்களூரு: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் இந்திராகாந்தி இசை நீரூற்று சாலையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்தனர்.
மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பெங்களூரு மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கம், கால்வாய் அமைக்கும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போல் ராஜ்பவன் சாலையை ஒட்டியுள்ள இந்திராகாந்தி இசை நீரூற்று அமைந்துள்ள சாலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இ்ப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுனர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

அதே போல் சாலை விரிவாக்க பணிகளுக்காக இருபுறமும் பள்ளங்கள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதால் சாலையின் அளவு குறைந்து வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கம் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்தனர்.

இது தொடர்பாக வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கூறியதாவது: பெங்களூருவின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்திராகாந்தி இசை நீறுற்றம் அமைந்துள்ள சாலை வழியாக பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் பல ஆயிரம் வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது.
அதே போல் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள், பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த வழியாக வந்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருப்பது வழக்கமானது. அப்படி போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் தற்போது ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதே போல் நடைபாதை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக இருபுறமும் தடுப்புவேலிகள், பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால் சாலை குறைந்து வாகனங்கள் எளிதாக செல்ல முடியாமல் ஊர்ந்து செல்கிறது. இதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மணி கணக்கில் சாலையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில் வாகன ஓட்டுனர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. விமான நிலையத்திலிருந்து வரும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இத்துடன் சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்லவும், நடந்து செல்வும் முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களின் நலனை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்கம் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.



Tags : Indira Gandhi Music Fountain Road , Road widening works at turtle speed on Indira Gandhi Music Fountain Road
× RELATED தெலுங்கானாவில் சங்கிலியால்...