×

டெல்லி ஆடிட்டரிடம் 4 கோடி இடத்தை பாதி விலைக்கு தருவதாக கூறி 1 கோடி மோசடி: பலே ஆசாமி போலிசில் சிக்கினார்

புதுடெல்லி: பாதி கட்டணத்திற்கு அலுவலக இடத்தை தருவதாக கூறி ஆடிட்டரிடம் 1 கோடி பெற்று ஏமாற்றிய சொத்து விற்பனை ஏஜென்டை போலீசார் கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த பட்டயக்கணக்காளர்(சிஏ) ஒருவர் ரோகினி பகுதியில் அலுவலகம் அமைக்க இடம் கேட்டு சொத்து விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ள ஏஜென்ட் சன்னி என்பரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ரோகினி பகுதியில் 4 கோடி மதிப்புள்ள இடத்தை பாதி விலைக்கு முடித்து தருவதாக சன்னி வாக்குறுதி அளித்தார். பின்னர், விற்பனையை முடிக்கும் முன்பாகவே, சன்னி ஆடிட்டரை தொடர்பு கொண்டு இடத்துக்கு சொந்தக்காரருக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் குறைந்தபட்சம் 1 கோடியை முன்பணமாக வழங்கினால் விற்பனையை முடிக்கலாம் என கூறினார்.

இதையடுத்து கடந்த மார்ச் 11ம் தேதியன்று பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு வந்த ஆடிட்டரிடம்,  துாரவாகவில் உள்ள மகாவீர் என்கிளேவ் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைக்குமாறு கூறினார். அங்கு சென்றபோது, சன்னியின் கூட்டாளிகள் ஆடிட்டரை வரவேற்று அலுவலகத்தில் அமரவைத்தனர். அப்போது, விற்பனையை முடிக்கும் முன்பாக பாதுகாப்பு கருதி பணத்தை முதலில் எண்ணிவிடுவதாக கூறி வேறொரு பார்டியையும் அழைத்து வந்து சன்னியின் கூட்டாளிகள் அமரவைத்தனர். அப்போது பணத்தை பக்கத்து அறையில் வைத்து பூட்டிவிடுமாறு கணக்காளரிடம் தெரிவித்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த அறையில் வேலை இருப்பதாக கூறி இருவர் உள்ளே சென்றனர்.

அந்த அறை அருகிலுள்ள வேறொரு பிளாட்டுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அதன்வழியே பணத்துடன் உள்ளே சென்ற சன்னியின் கூட்டாளிகள் தப்பினர். அதன்பின் கணக்காளருடன் அமர்ந்திருந்த இன்னொரு நபரும் வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறி அங்கிருந்து தப்பினார். நீண்டநேரமாகியும் வௌியில் சென்றவர்கள் வராததால் சந்தேகமடைந்த கணக்காளர் போலீசில் சென்று புகார் அளிதார். பின்னர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பணம் இல்லை. இதையடுத்து வழக்கு பதிவு செய்து தப்பியோடி நபர்களை தேடி வந்தனர்.

அதன்பேரில், குற்றவாளி வினித் பரத்வாஜ் என்பவரை கூட்டாளிகளுடன் கைது செய்தனர். வினித்,எவென்ட் மேனேஜ்மெண்ட் தொழில் செய்து வருகிறார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் சன்னி என்கிற முகமது இமாமம் கான் என்பது தெரியவந்தது. பின்னர் சன்னி மோசடி செய்து வைத்தள்ள பணத்துடன் இந்திர்புரி பகுதிக்கு வரும் தகவல் போலீசாரருக்கு கிடைத்தது. அங்கு சென்று காத்திருந்த போலீசார் பின்னர் பணத்துடன் வந்த சன்னியை மக்கி கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி செய்த பணத்தில் ₹70,40,000 ஐ போலீசார் மீட்டனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Delhi ,Bale Asami , 1 crore scam by claiming to give 4 crore seats to Delhi auditor for half price: Pale Asami caught
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...