பாஜ கட்சியில் இணைந்த ரவுடி கல்வெட்டு ரவி, 7 பேருக்கு குண்டாஸ்: போலீஸ் கமிஷனர் உத்தரவு

சென்னை: வடசென்னையில் பிரபல ரவுடியாக உள்ளவர் கல்வெட்டி ரவி(41). இவர் மீது 6 கொலை, 8 கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. 6 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். என்கவுண்டர் பட்டியலிலும் இவர் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு ரவுடி கல்வெட்டு ரவி பாஜவின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இணைந்தார். இந்நிலையில் தேர்தலின் போது குற்றப்பின்னணி உள்ள ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் ரவுடி கல்வெட்டி ரவியை புது வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி ரவுடி கல்வெட்டு ரவியை போலீசார் குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்தனர். அதேபோல், பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்பு உள்ள 6 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அைடக்கப்ட்டனர்.

Related Stories:

More