கீழ்வேளூர் பாமக வேட்பாளர் மாற்றம்: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: பாமக சார்பில் கீழ்வேளூர் தனி தொகுதியில் வேத.முகுந்தன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென அவரை பாமக நேற்று மாற்றி அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேத.முகுந்தன் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடுவார்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>