×

4வது முறையாக ஒலிம்பிக்சில்!

இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் அசந்தா சரத் கமல், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஒற்றையர் பிரிவில் களமிறங்க தகுதி பெற்றுள்ளார். தோஹாவில் நடக்கும் ஆசிய அளவிலான ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பாகிஸ்தானின் ரமீஸ் முகமதுவுடன் (690வது ரேங்க்) நேற்று மோதிய சரத் கமல் 11-4, 11-1, 11-5, 11-4 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இப்போட்டி 23 நிமிடம் மட்டுமே நீடித்தது. இந்த வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒற்றையர் பிரிவில் 4வது

முறையாக ஒலிம்பிக்சில் விளையாட தகுதி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவிலும் தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று சரத் தகவல் பதிந்துள்ளார். இவர் ஏற்கனவே 2004 (ஏதன்ஸ்), 2008  (பெய்ஜிங்) மற்றும் 2016 (ரியோ) ஒலிம்பிக்சில் விளையாடி உள்ளார்.

Tags : Olympics , 4th, formally, at the Olympics!
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி...