×

கொரோனா எதிர்ப்பு சக்தியுடன் அமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை

நியூயார்க்: அமெரிக்காவில் தடுப்பூசி போடப்பட்ட தாயக்கு, கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் குழந்தை  பிறந்துள்ளது. அமெரிக்காவில், புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பால் கில்பெர்ட், சாட் ரூட்னிக் ஆகிய 2 மருத்துவ பேராசிரியர்கள் தான் இதனை கண்டுபிடித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: 9 மாத கர்ப்பிணிக்கு கர்ப்ப கால தடுப்பூசியுடன், கொரோனா தடுப்பூசியும்் 36வது வாரத்தில் செலுத்தப்பட்டது. அடுத்த  3 வாரங்களில் அப்பெண் அழகிய பெண் குழந்தையை பெற்றார்.

அந்த குழந்தையை பரிசோதித்த போது, அதற்கு  கொரோனா எதிர்ப்பு சக்தி முழு அளவில் இருந்தது. இதற்கு முந்தைய ஆய்வுகளில், கொரோனாவில் இருந்து மீண்ட தாய்மார்களின் தொப்புள்கொடி மூலம் குழந்தைகளுக்கு கிடைத்த எதிர்ப்பு திறன் எதிர்பார்த்த அளவை விட குறைவாகவே இருந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வுகளில், கர்ப்ப காலத்தில் போடப்படும் தடுப்பூசி மூலம், பிறக்கும் குழந்தைக்கும் அதிகளவு வைரஸ் எதிர்ப்பு திறன் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்ற எதிர்ப்பு சக்தியுடன் குழந்தை பிறந்திருப்பது, உலகில் இதுவே முதல்முறை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : United States , Corona, resistance, United States, born, child
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து