விருத்தாசலத்தில் வேட்புமனு தாக்கல் பிரேமலதா சொத்து ரூ.87 கோடி

விருத்தாசலம்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தாக்கல் செய்த வேட்புமனுவில் ரூ.65 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. இந்த கூட்டணியில் 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் தேர்தலில் போட்டியிடவில்லை. பொருளாளர் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது பிரமாண பத்திரத்தில், பிரேமலதாவின் பெயரில் அசையும் சொத்தாக ரூ.5.98 கோடியும், அசையா சொத்தாக ரூ.32.8 கோடியும், கடன் ரூ.8.15 கோடியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிரேமலதா கணவர் விஜயகாந்த் பெயரில் அசையும் சொத்து ரூ.6.94 கோடியும் அசையா சொத்தாக ரூ.41.55 கோடியும், கடன் ரூ.8.15 கோடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>