எல்.முருகனுக்கு ரூ.2 கோடி சொத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில், பாஜக வேட்பாளராக மாநில தலைவர் எல்.முருகன் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இருந்தனர். வேட்பு மனு பிரமாண பத்திரத்தில், ‘தனது பெயரில் ரூ.84 லட்சத்து 7 ஆயிரத்து 597 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ரூ.45 லட்சத்து 51 ஆயிரத்து 17 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும், கையிருப்பாக ரூ.45 ஆயிரமும் மனைவி கலையரசி பெயரில் ரூ.65 லட்சத்து 2 ஆயிரத்து 619 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 33 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்களும், கையிருப்பாக ரூ.75 ஆயிரமும் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 29 லட்சத்து 2 ஆயிரத்து 216.

Related Stories:

>