4வது டி20 போட்டி: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான 4 வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 57 ரன்களும், ஐயர் 37 ரன்களும் எடுத்தனர். 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி  பெற்றது.

Related Stories:

>