வாக்கு கேட்டு பணப்பட்டுவாடா!: அமைச்சர் எம்.சி. சம்பத் ஆதரவாளர் வீட்டில் ஐ.டி. ரெய்டு..!!

கடலூர்: கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் சட்டமன்ற தொகுதியில், தொழிற்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் போட்டியிடுகிறார். இந்நிலையில் அமைச்சர் சம்பத்துக்கு வாக்கு கோரி அப்பகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள மதிழயகன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரித்துறையினரின் சோதனைக்கு உள்ளாகியுள்ள மதிவழகன் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம், தேர்தல் ஆணையமும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தீவிர வாகன சோதனைகளை நடத்தி பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் வருமான வரி ஏய்ப்பு, பணப் பரிமாற்ற முறைகேடு தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories:

>