பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா, நிதின் கட்கரி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 30 தலைவர்கள் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம்!!

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பாஜக தலைவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து கட்சியினர் தங்களது கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலை அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் மற்றும்  இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும்  ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பாஜக தலைவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி , நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், ஸ்மிருதி ராணி, யோகி ஆதித்யநாத், சிவராஜ் சிங் சவுகான்,ஜே,.பி.நட்டா, கிஷன் ரெட்டி, வி.கே.சிங், சிடி ரவி, சுதாகர் ரெட்டி, தேஜஸ்வி சூர்யா, எல் கணேசன், வி.பி. துரைசாமி, டி புரண்டேஸ்வரி, டி. ராகவன்ம் சசிகலா புஷ்பா, நடிகை கௌதமி, ராதா ரவி, ராமலிங்கம், காயத்ரி தேவி, ராம் குமார், கணேசன், விஜய சாந்தி, செந்தில், வேலூர் இப்ராஹிம், ராமா சீனிவாசன், கனகா சபாபதி ஆகியோர் உள்ளனர்.

Related Stories:

>