×

பாதாள குழிகளாக மாறிய தார்ச்சாலை: இரவில் அடிக்கடி நடக்கும் விபத்து

காளையார்கோவில்: காளையார்கோவில் அருகே பெரும் விபத்தை ஏற்படுத்தும் வகையில், குண்டும் குழியுமாக தார்ச்சாலைகள் உள்ளது.காளையார்கோவில் ஒன்றியம் அரசகுளம், வேளாங்குளம், அணியவயல், அந்தரந்தல், சிவந்தரேந்தல், வழியாக சிலுக்கபட்டி செல்லும் தார்ச்சாலை  மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல வருடங்களுக்கு முன் போடப்பட்ட தார் ச்சாலை மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டும், எதிரேவரும் வாகனங்கள் வருவது தெரியாத அளவிற்கு  ரோட்டோரங்களிலும் வளைவுகளிலும் முட்புதர்கள் மண்டி கிடப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

அப்பகுதியில் பெரும்பாலானோர் அதிகளவு விவசாயங்களை பிரதான தொழிலாகச் செய்து வருகின்றார்கள். விவசாயத்திற்கு தேவையான  ஈடுபொருட்கள் வாங்குவதற்கும் மற்றும் விளைபொருட்கள் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்பட்டோர் இச்சாலை  வழியாக காளையார்கோவில் சென்று வருகின்றார்
கள். அப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் காளையார்கோவிலில் கடை வைத்திருப்பவர்கள், மில் வேலைக்கும்,  கூலி வேலைக்கும் வருபவர்கள் தங்கள் பணிகளை முடித்துக்கொண்டு இரவு நேரங்களில் இச்சாலை வழியாகச் செல்கிறார்கள்.

அப்போது பெரும் விபத்தினை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் இயக்கப்படும் தனியார் மினி பேருந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு  நின்று விடுவதினால், அப்பகுதி பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. இது குறித்து அரசியல் தலைவர்களிடமும் அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை  எடுத்து தரமான சாலை அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.



Tags : Darshala , Darshala turned into ditches: a frequent accident at night
× RELATED ₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி