தோகைமலை அருகே வாளைக்கிணம் பகுதி பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனஓட்டிகள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தோகைமலை: தோகைமலை அருகே தோகைமலை பாளையம் மெயின் ரோட்டில் வாளைக்கிணம் கிழக்கு பகுதியில் உள்ள பாலத்தின் இருபுறமும்  நெடுஞ்சாலை துறையினர் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டமாங்கிணம் ஊராட்சி வாளைக்கிணம் கிழக்கு பகுதியில் தோகைமலை பாளையம் மெயின்ரோட்டில் பாலம் அமைந்து உள்ளது.  பெருமாள்கவுண்டம்பட்டி குளத்தில் இருந்து வரும் ஆற்றுவாரிக்காக அமைக்கப்பட்டு உள்ள பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க படாமல்  உள்ளது. மேலும் பாலத்தின் இருபுறமும் போதிய இடமில்லாமல் உள்ளதால் இரு வாகனங்கள் கடக்கும் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவதாக  கூறுகின்றனர்.

இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் செல்கின்றனர்.வாகன ஓட்டிகள் அச்சம் இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க பாலத்தின் இருபுறமும் தடுப்புசுவர் அமைக்க வேண்டும் என்று கிருஷ்ணராயபுரம்  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை . ஆகவே வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி பாலத்தின் இருபுறமும் தடுப்பு வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories:

>